A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இன்று (22-07-2018) இரவு 8 மணி முதல் 20,000 கன அடியிலிருந்து 30,000 கன அடியாக திறந்து விடப்பட உள்ளது-

news

July 22

 மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இன்று (22.07.2018) இரவு 8 மணி முதல் 20,000 கன அடியிலிருந்து 30,000 கன அடியாக திறந்து விடப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்ததாவது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து ஏற்கனவே காவிரியில் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் 20,000 கன அடியிலிருந்து இன்று (22.07.2018) இரவு 8.00 மணி முதல் 30,000 கன அடியாக உயர்த்தி திறந்து விடப்பட உள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (22.07.2018) மாலை 4.00 மணி நிலவரப்படி 117.740 அடியாக உள்ளது.

மேலும் அணைக்கு வினாடிக்கு சுமார் 60,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தின் கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து வினாடிக்கு 70,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏனவே காவிரி ஆற்றிற்கு தொடர்ந்து அதிகளவு நீர்வரத்து இருப்பதால், மேட்டூர் அணையில் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது.

காவிரி கரையோரம், கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாடீநுடீநுடீநுடீநுகள் மற்றும் தாடிநவான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சற்று மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும்படியும், தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாடீநுடீநுடீநுடீநுகளிலும் இன்று (22.07.2018) இரவு 10.00 மணி முதல் 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு 1,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும், வருவாடீநுத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்துறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு தண்டோரா மூலமும், ஒலிப்பெருக்கி மூலமும், தொலைக்காட்சி மற்றும் செடீநுதித்தாள்கள் வாயிலாகவும், நேரிடையாகவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் செடீநுயப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அங்கேயே முகாமிட்டு தொடர்ந்து நீர்வரத்து குறித்து ஆடீநுவு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் 24ஒ7 தொடர்ந்து அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளம் தொடர்பான உதவிக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண்.1077-ஐ தொடர்பு கொள்ளவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, பொதுமக்கள் எவரும் மேட்டூர் அணையின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள், சேலம் மாவட்டம், மேட்டூர், எடப்பாடி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள் மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாடீநுகளில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பற்ற முறையில் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்களோ, சுயபடங்கள் (ளுநடகநை) எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, அவர்கள் தெரிவித்துள்ளார்.

CFCM News

(Centre for Community Media)

2096 Days ago

Video News